ஆப்நகரம்

சினிமாவில் உடலை காட்டி நடிக்க விரும்பவில்லை: தனுஷ் பட நடிகை!

என் பெற்றோரை வேதனைப்படுத்தும் விதத்தில் உடலை காட்டி நடிக்க விரும்பவில்லை என்று தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூர் கூறியுள்ளார்.

Samayam Tamil 2 May 2018, 3:30 pm
என் பெற்றோரை வேதனைப்படுத்தும் விதத்தில் உடலை காட்டி நடிக்க விரும்பவில்லை என்று தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூர் கூறியுள்ளார்.
Samayam Tamil amyra-dustur


‘அனேகன்’ படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அமைரா தஸ்தூர். இவர் அறிமுகமான முதல் தமிழ் படம். ஆனால் இதற்கு முன் ‘இஷாக்’ என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், மனவருத்துடன் இருந்து வந்தார் அமைரா தஸ்தூர்.

இது குறித்து அமைரா தஸ்தூர் கூறுகையில், ‘‘நான் நடித்த முதல் படம் ஓடவில்லை என்றாலும், நல்ல நடிகை என்ற பெயர் எனக்கு கிடைத்தது. அடுத்து இரண்டாவது படமும் ஒடவில்லை. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். சில காலம் வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நான் தினமும் செல்லும் டான்ஸ் கிளாஸ், ஜிம்முக்குகூடப் போகவில்லை.

பின்னர் மாடலிங் செய்ய துவங்கினேன். காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே போலியாக சினிமாவில் நடிப்பது கடினமாக இருக்கிறது. சினிமாவில் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன்.
நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். எனவே, என் பெற்றோரை வேதனைப்படுத்தும் விதத்தில் உடலை காட்டி நடிக்க விரும்பவில்லை’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்