ஆப்நகரம்

மாஸ்டர் ஸ்பெஷல் ஷோ: நல்ல வார்த்தை சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு

மாஸ்டர் படத்திற்கு சிறப்புக் காட்சிகள் நடத்த படக்குழு கேட்டால் அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Dec 2020, 1:29 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் 2020ம் ஆண்டு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே அது முடியாமல் போனது.
Samayam Tamil master


இந்நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. இந்த பேச்சு கிளம்பிய நிலையில் மாஸ்டர் படம் ஜனவரி மாதம் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

போட்ரா வெடிய, இது தளபதி பொங்கல்: ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் உறுதி

அதுவரை மாஸ்டர் ரிலீஸ் தேதி தெரியாமல் இருந்த ரசிகர்கள் அமைச்சர் சொன்னதை கேட்டு குஷியாகிவிட்டனர். கொரோனா வைரஸ் பிரச்சனையால் தற்போது தியேட்டரிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்துமாறு மாஸ்டர் படக்குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

விஜய் படம் என்றால் அதிகாலை சிறப்புக் காட்சி நிச்சயம் இருக்கும். அந்த சிறப்பு காட்சியை பார்க்க ரசிகர்கள் போட்டா போட்டி போடுவார்கள். கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சி சாத்தியமா என்று கேள்வி எழுந்தது.

சிறப்புக் காட்சி குறித்து விஜய் ரசிகர்கள் யோசனையில் இருக்க அமைச்சர் கடம்பூர் ராஜு நல்லவார்த்தை சொல்லியுள்ளார். மாஸ்டர் பற்றி கடம்பூர் ராஜு கூறியதாவது,

சிறப்புக் காட்சிகள் வேண்டும் என்று மாஸ்டர் படக்குழு எங்களை அணுகினால் தமிழக அரசு நிச்சயம் அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு கூறிய இந்த விஷயம் விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அமைச்சர் ஒவ்வொரு முறை மாஸ்டர் பற்றி பேசும்போது நல்ல விஷயமாக சொல்கிறார் என்று விஜய் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு இதுவரை எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்