ஆப்நகரம்

ஓவியா இல்லாத பிக்பாஸை பார்க்க மாட்டோம்: எப்போது திரும்ப வருவார்? கொந்தளிப்பில் ரசிகர்கள்!

ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என்று ஓவியா ரசிகர்கள் தற்போது கொந்தளித்துள்ளனர்.

TNN 6 Aug 2017, 8:29 pm
ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என்று ஓவியா ரசிகர்கள் தற்போது கொந்தளித்துள்ளனர்.
Samayam Tamil if oviya is not comeback to big boss we do not see it says oviya fans
ஓவியா இல்லாத பிக்பாஸை பார்க்க மாட்டோம்: எப்போது திரும்ப வருவார்? கொந்தளிப்பில் ரசிகர்கள்!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் உண்மையை மட்டும் பேசி மக்களின் ஆதரவை பெற்றவர் ஓவியா. யாருக்கும் அடிமையாகாமல், வெளிப்படையாக பேசிக்கொண்டு தனக்கு பிடித்ததை மட்டும் பேசியும், செய்து கொண்டு வந்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார். கூகுளில் ஓவியாவுக்கு மட்டும் 95 சதவீத ஓட்டுகள் விழுந்தது. எப்போதும் ஓவியாவுக்கு பிரச்சனையாக இருந்த காயத்ரி, ஜூலி மற்றும் சக்தி ஆகியோருக்கு எதிராக ஓவியாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். அவர்களுக்கு எதிராக கருத்துக்களையும், மீம்ஸ்களையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன்னுடைய காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் மன அழுத்தம், விரக்தி ஏற்பட்டு நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன் பின் காப்பாற்றப்பட்ட பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார் என்றும், கமல்ஹாசன் அவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் உள்ளே அனுப்பிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஓவியா வெளியே சென்றது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஓவியாவிற்காகவே அந்த நிகழ்ச்சியை பார்த்து வந்ததாகவும், இனிமேல் அந்த நிகழ்ச்சியை பார்க்கப்போவதில்லை என்றும் ஓவியா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்