ஆப்நகரம்

Ajith: அடேங்கப்பா...! அஜித் கூட நடிக்க இப்படியொரு கண்டிஷன் போட்ட யாஷிகா ஆனந்த்!

பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், தான் அஜித் உடன் நடிக்க ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

Samayam Tamil 29 May 2019, 10:59 am
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 2’வில் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா ஆனந்த் மிகவும் பிரபலமானார். அவருடைய தைரியமான மனப்பான்மை பலரையும் ஈர்த்தன.
Samayam Tamil Ajith Yashika


நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் மகத் உடன் காதல் வயப்பட்டு, பரபரப்பைக் கூட்டினார். இறுதிச் சுற்றுக்கு முன்பாக பொதுமக்களின் வாக்களிப்பின் படி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டர் சாட் ஒன்றில் யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார். அதில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், நடிகர் அஜித் உடன் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. அதிலும் குறிப்பாக ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது, முதலில் அஜித் உடன் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

அது எந்தவொரு கேரக்டராக இருந்தாலும் நான் நிச்சயம் நடிப்பேன். ஆனால் தங்கை கதாபாத்திரம் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, எனக்கு வயதாகும் போது, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது ‘ஸாம்பி’ என்ற படத்தில் யாஷிகா நடித்து கொண்டிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்