ஆப்நகரம்

Ilaiyaraaja Birthday:கருணாநிதி இறந்த பிறகும் கூட மாறாத இசைஞானி இளையராஜா

Ilaiyaraaja news: கலைஞர் கருணாநிதி மறைந்தாலும் அவருக்காக தான் செய்யும் விஷயத்தை இசைஞானி இளையராஜா இன்றுவரை மாற்றிக்கொள்ளவே இல்லை.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 2 Jun 2023, 11:38 am
Isaignani Ilaiyaraaja: இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாள் இன்று. ஆனால் உண்மையில் இன்று அவரின் பிறந்தநாளே இல்லை.
Samayam Tamil ilaiyaraaja has not changed his special day even after karunanidhis demise
Ilaiyaraaja Birthday:கருணாநிதி இறந்த பிறகும் கூட மாறாத இசைஞானி இளையராஜா


​இளையராஜா​

இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #இளையராஜா என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் நிஜத்தில் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று இல்லை நாளை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனைனா

​கருணாநிதி​

ஜூன் மாதம் 3ம் தேதி தான் பிறந்தார் இளையராஜா. ஆனால் ஜூன் 3ம் தேதி மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளாகும். கருணாநிதி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் இளையராஜா. அதனால் ஜூன் 3ம் தேதி கருணாநிதிக்கு மட்டுமே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று தன் பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடுகிறார். இளையராஜாவுக்கு இசைஞானி என்கிற பட்டத்தை கொடுத்தவர் கருணாநிதி.

கலைஞர்​

ஜூன் 3ம் தேதி அனைவரின் கவனமும், வாழ்த்தும் கலைஞர் கருணாநிதிக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று விரும்பி தன் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடி வருகிறார் இளையராஜா. கருணாநிதி இறந்த பிறகும் கூட தன் பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி தான் கொண்டாடுகிறார். கலைஞர் இருந்தாலும் இறந்தாலும் ஜூன் 3ம் தேதி அவருக்கு மட்டும் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் இளையராஜா.

Ilaiyaraaja: இளையராஜாவின் பிறந்தநாளான இன்று பெங்களூரில் நடந்த அதிசயம்: உங்களுக்கு நடந்திருக்கா?

​வாழ்த்து​

தன் தந்தையை கவுரவித்த இளையராஜாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடம்பாக்கத்தில் இருக்கும் இளையராஜாவின் அலுவலகத்திற்கு காலையிலேயே சென்று இசைஞானியை வாழ்த்துவிட்டு தான் தன் பிற வேலையை செய்ய கிளம்பினார் ஸ்டாலின். முதல்வரின் இந்த செயல் இளையராஜாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

​ஸ்டாலின்​

இளையராஜாவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா! அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி! அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! @ilaiyaraaja என தெரிவித்துள்ளார்.

முதல்வர்

​கமல்​

இசைக்கு உலக நாயகன் கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தான் இளையராஜாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டு கமல் ஹாசன் கூறியிருப்பதாவது, திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன். #HappyBirthdayIlaiyaraaja என தெரிவித்துள்ளார்.

உலக நாயகன்

​ஆதிக்கம்​

பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜாவால் குடும்ப வறுமையால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. இதையடுத்தே அவரின் கவனம் இசை பக்கம் திரும்பி இன்று உலகம் போற்றும் இசைஞானியாக இருக்கிறார். இன்று சமூக வலைதளங்கள் அனைத்திலும் இளையராஜாவின் ஆதிக்கம் தான். திரும்பும் பக்கம் எல்லாம் இளையராஜாவின் பாடல் வீடியோக்களாக தான் உள்ளன. அவரை பற்றி இசை ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Kamal Haaasan:மாமன்னன் படம் பார்த்துவிட்டேன், முதல் விமர்சனத்தை வெளியிட்ட கமல்


எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்