ஆப்நகரம்

இளமை மாறாத ராஜா... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இசைஞானியின் வைரல் வீடியோ!

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 31 Dec 2021, 6:05 pm
பல தசாப்தங்களாக தனது இசையால் ராஜாங்கம் நடத்தும் இசையின் மாஸ்ட்ரோவான இசையமைப்பாளர் இளையராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளையராஜா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Ilayaraja
Ilayaraja


இளையராஜா தற்போது தமிழரசன், மருத, மாயோன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை பற்றி திடீரென வதந்தி பரவியது. இதுகுறித்து இசைஞானியின் நெருங்கிய வட்டாரத்தில் மீடியாக்கள் விசாரித்த போது, அவர் நலமுடன் இருப்பதாகவும், வீண் வதந்தி என்றும் அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டிலிருந்து ஸ்டூடியோவிற்கு காரில் செல்லும் போது, பயணித்தபடியே தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை 'இளமை இதோ இதோ. இனிமை இதோ.. என 'சகலகலா வல்லவன்' பட பாடலை பாடலாகவே பாடி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தனது உடல்நிலை குறித்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இளையராஜா.

Simbu: 'வெந்து தணிந்தது காடு' படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கமல், இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு ஹாப்பி நியூ இயர் என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்