ஆப்நகரம்

கலிபோர்னியாவில் இளையராஜா படங்களின் பெயர்களில் உணவு வகைகள்!

கலிபோர்னியாவில் இளையராஜா படங்களின் பெயர்களில் உணவு வகைகள் இயங்கி வருவதை வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Samayam Tamil 17 Mar 2018, 4:49 pm
கலிபோர்னியாவில் இளையராஜா படங்களின் பெயர்களில் உணவு வகைகள் இயங்கி வருவதை வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
Samayam Tamil ilayaraja songs food variety in san francisco hotel
கலிபோர்னியாவில் இளையராஜா படங்களின் பெயர்களில் உணவு வகைகள்!


கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலில் உள்ள மெனு வகைகளை இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்கு ஏற்பவும் மாற்றி அமைத்துள்ளார். அந்த வகையில், இளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களில் தனது ஹோட்டலில் தயாராகும் உணவு வகைகளுக்கு பெயர் வைத்துள்ளார்.

இந்த பெயர் மாற்றத்தை வித்தியாசமாக பார்க்கும் வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வந்து அதிகளவில் வாங்கி சாப்பிடுவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த ஹோட்டல் செஃப் மகேஸ்குமார் என்பவர் கூறுகையில், இளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களை வைத்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருகின்றனர். இது அமெரிக்காவில் இளையராஜா ரசிகர்கள் அதிகம் இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அன்னக்கிளி: பூண்டு ரசம்
நான் கடவுள்: கீரை மசால்
மூடுபனி: அரிசி சாதம்
தாரை தப்பட்டை: புளிசாதம்
நாச்சியார்: பன்னீர் மிளகு மசாலா
தளபதி: பூசணி கூட்டு
நாயகன்: ஓட்ஸ் அல்வா

அடுத்த செய்தி

டிரெண்டிங்