ஆப்நகரம்

கபாலியை அடுத்து விஜய் உடன் கைகோர்க்கிறார் பா. ரஞ்சித்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘கபாலி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது. இப்படம் குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.

TNN 30 Jul 2016, 3:04 pm
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘கபாலி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது. இப்படம் குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.
Samayam Tamil ilayathalapathy vijay to team up with kabali director for his next
கபாலியை அடுத்து விஜய் உடன் கைகோர்க்கிறார் பா. ரஞ்சித்


கபாலி படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவின் ‘வி.கிரியேஷன்’ தயாரிப்பில் மீண்டும் பா. ரஞ்சித் படம் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த கூட்டணியில் கதாநாயகனாக விஜய் இணைய வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப் படுகிறது.
முன்னதாக பா. ரஞ்சித் நடிகர் விஜயை சந்தித்ததாக தகவல் வெளிவந்தது. இதனை செய்தியாளர்களும் உறுதி செய்தனர். அவர்களின் சந்திப்பின் போது, அடுத்த படத்திற்கான கதையை விஜயிடம் ரஞ்சித் சொல்லியிருக்கலாம் என நம்பபடுகிறது. அதோடு, தெறி படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வசூல் சாதனை படைத்திருந்ததால் இந்த கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு அதிகம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா. ரஞ்சித் நடிகர் சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு விஜய் தனது 60வது படத்திற்கான சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனால் விஜயின் அடுத்த படத்தில் பா. ரஞ்சித் இணைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்