ஆப்நகரம்

வைரலாகும் இலியானாவின் ஹாட் நீச்சல் வீடியோ!!

நடிகை இலியானா நீச்சல் உடை அணிந்து நீச்சல் அடிக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

TOI Contributor 5 Nov 2016, 11:44 am
நடிகை இலியானா நீச்சல் உடை அணிந்து நீச்சல் அடிக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ileana d cruzs hot swim video
வைரலாகும் இலியானாவின் ஹாட் நீச்சல் வீடியோ!!


தற்போதைய கதாநாயகிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கிளாமர் காட்டி நடித்து வருகின்றனர். சிலர் படங்களில் மட்டும் கிளாமராக காட்சியளிக்கின்றனர். சிலர் நிஜ வாழ்க்கையிலும் கவர்ச்சியை பிரபலப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் தங்களின் உடல் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் திரையுலகத்தில் முன்னுக்கு வந்த ஹீரோயின்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் எமி ஜாக்சன், இலியானா போன்ற ஹீரோயின்கள் அடிக்கடி ஏதாவது ‘ஹாட்’ ஆன புகைப்படத்தையோ, வீடியோவையோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

சமீபத்தில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாணப் புகைப்படத்திற்கு சவால் விடும் வகையில் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்த இலியானா நீச்சல் உடை அணிந்து நீச்சல் அடிப்பது போன்ற ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இலியானா பிறந்தநாள் அன்று நீச்சல் அடிப்பது போன்ற வீடியோ தன் ஆண் நண்பரால் எடுக்கப்பட்டது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். இந்த நீச்சல் வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்