ஆப்நகரம்

இணையத்தில் அதிகம் தேடும் பிரபலமான நடிகை இலியானா!

இணையத்தில் அதிகம் தேடுபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை இலியானா என்று பிரபல கம்ப்யூட்டர் செக்யூரிட்டி நிறுவனமான மகஃபீ (McAfee) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 1:04 pm
இந்தியாவில், பிரதமர், ஜனாதிபதியை விட சினிமா துறையில் இருப்பவர்கள் தான் மக்களிடம் அதிகம் பிரபலமாகி வருகின்றனர். மக்கள் குறிப்பிட்ட சில நடிகர், நடிகைகளை சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்பற்றி வருகின்றனர். மேலும் தேடும் பட்டியலில் சினிமா நட்சத்திரங்களின் பெயர்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன. அதை பயன்படுத்தி சில ஹாக்கர்கள் வைரஸ் உள்ள இணையதளங்களுக்கு பார்வையாளர்கள் வரவைத்து எளிதில் ஹேக் செய்துவிடுகின்றனர். சினிமா மீதான மோகத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
Samayam Tamil iliyana


இதில் எந்த பிரபலத்தின் பெயர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்ற தகவலை மகஃபீ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பிரபல நடிகை இலியானா தான் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளதால் அவர் பெயரைத்தான் மக்கள் அதிகம் இணையத்தில் தேடியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்