ஆப்நகரம்

இலியானா குடும்பத்தில் நேர்ந்த மரணம்: நடிகையின் உருக்கமாக பதிவு

நடிகை இலியானா சமீபத்தில் மறைந்த தனது uncle பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 2 Apr 2020, 5:20 pm
தமிழில் கேடி மற்றும் நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் இலியானா. நண்பன் படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் அவர்.
Samayam Tamil Ileana


இந்நிலையில் இலியானாவின் மாமா இறந்துவிட்டதாகவும், அதற்காக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

"உங்களின் போட்டோக்கள், விடீயோக்கள், ஆடியோ இன்னும் அதிகமாக எடுத்து வைத்திருந்திருக்கலாம் என இப்போது தோன்றுகியது. நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்பதை தற்போது கூட என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை."

"மிகுந்த வலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.. அதுவும் அரை மனதுடன் தான், நீங்கள் இறந்ததாக என மனதில் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உங்களை எனக்கு மிக அதிகம் பிடிக்கும் என்பதை கூற விரும்புகிறேன். உங்களுடன் இன்னும் அதிக நேரம் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. நாங்கள் எல்லோரும் அதை தான் விரும்பினோம்."3

"சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அது இருந்தால் நீங்கள் அங்கு உங்கள் பூனைகளுடன் சந்தோசமாக இருப்பீர்கள் என தெரியும்."

"நாளை தூங்கி எழும்போதும் இதெல்லாம் ஒரு கனவாக மாறிவிடக்கூடாத என்று என் மனம் ஏங்குகிறது. மீண்டும் உங்களுடன் ஒரு முறை பேசிவிட மாட்டோமா என்று" என இலியானா குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram I wish I had more pictures, more videos, audio notes, anything really... my heart still can’t come to terms with the fact that you’re gone. You were the most wonderful, beautiful, gentlest man I knew....it’s so painful to even write these words down because some part of me still can’t believe it...all I wish I could tell you is that you were loved so so much...I wish I could have had more time with you...we all wish we had more time... I don’t know if I believe in heaven but if it exists then I know you’re there...with your multitude of cats...”cat whisperer” I called you..there wasn’t a single cat I picked off the street that you didn’t nurture and love with all your heart..and by god they loved you right back...I could just go on and on about the amazing things you did not just for me but for us all...you weren’t just my favourite uncle, my Tiru... you were my second papa ♥️ And I miss you so goddamn much... Still hoping I’ll wake up tomorrow and this’ll just be a bad dream...hoping I could talk to you one more time 💔 I wish I had more time ♥️♥️♥️ A post shared by Ileana D'Cruz (@ileana_official) on Mar 31, 2020 at 6:29am PDT

இலியானா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பாகல்பாண்டி. தற்போது பிக் புல் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்