ஆப்நகரம்

நான் இனி அவள் இல்லை அவன்: மூன்றாம் பாலினமாக மாறிய பிரபல நடிகை

ஜூனோ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட எலன் பேஜ் தான் தற்போது மூன்றாம் பாலினத்தவராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Dec 2020, 4:27 pm
ஜூனோ, இன்செப்ஷன் உள்ளிட்ட படங்களில் எலன் பேஜ் என்கிற பெயரில் நடித்தவர் தற்போது எலியட் பேஜாக மாறியுள்ளார். ஜூனோ படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் அவர். இந்நிலையில் தான் ஆணாக மூன்றாம் பாலினத்தவராக மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil elliot page


இது குறித்து எலியட் பேஜ் கூறியிருப்பதாவது,

நான் மூன்றாம் பாலினத்தவர் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனி என்னை அவன் என்று சொல்லலாம், என் பெயர் எலியட். இதை எழுத, இங்கு இருக்க, என் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வர நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

இந்த பயணத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஒரு வழியாக நான் விரும்பியபடி ஆனது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. மூன்றாம் பாலின சமூகத்தை சேர்ந்த பலர் என்னை இன்ஸ்பையர் செய்துள்ளனர். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி. என்னால் முடிந்த ஆதரவை நான் அளிப்பேன்.

என் சந்தோஷம் உண்மை தான். நான் தற்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது என்பது தான் உண்மை. வெறுப்பு, ஜோக்குகள் மற்றும் வன்முறையை நினைத்து பயப்படுகிறேன். மூன்றாம் பாலினத்தவர்களை பாகுபாடு பார்த்து ஒதுக்கி வைப்பது மோசமாக இருக்கிறது. 2020ம் ஆண்டில் மட்டும் குறைந்தது 40 மூன்றாம் பாலினத்தவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கருப்பின மற்றும் லேடின் மூன்றாம் பாலின பெண்கள்.

நான் ஒரு மூன்றாம் பாலின ஆள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. மூன்றாம் பாலினம் என்பதால் கஷ்டப்படும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நான் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன், நேசிக்கிறேன், இந்த உலகம் நல்லவிதமாக மாற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு அதிகம் யாஹூ செய்யப்பட்ட பிரபலம்: மோடியை முந்திய சுஷாந்த்

அடுத்த செய்தி

டிரெண்டிங்