ஆப்நகரம்

எனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ

தனக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நவ்தீப்.

Samayam Tamil 5 Jun 2020, 4:20 pm
கடந்த 2004ம் ஆண்டு வெளியான ஜெய் தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் நவ்தீப். விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படம் மூலம் கோலிவுட் வந்தவர் நவ்தீப். அந்த படத்தில் ஆர்யாவும் நடித்திருந்தார். அறிந்தும் அறியாமலும் படத்தை பார்த்த பல பெண்கள் நவ்தீப் ரசிகையானார்கள். நவ்தீப் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
Samayam Tamil navdeep


அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் சீறு. சன்னி லியோன் நடித்து வரும் வீரமாதேவி படத்தில் நவ்தீப்பும் நடிக்கிறார். நவ்தீப் தெலுங்கு படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவர் படங்கள் தவிர்த்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், தொகுத்தும் வழங்குகிறார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நவ்தீப் கலந்து கொண்டார்.

நவ்தீப் அந்த நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகையை காதலிக்கிறார், சின்னத்திரை பிரபலத்தை காதலிக்கிறார், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியை காதலிக்கிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் அவ்வப்போது செய்திகள் வெளியிடும். இந்நிலையில் நவ்தீப்புக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.

இதை பார்த்த நவ்தீப் விளக்கம் அளித்துள்ளார். ரகசிய திருமண செய்தி குறித்து நவ்தீப் கூறியதாவது,

எனக்கு திருமணம் நடக்கவில்லை. நான் இன்னும் பேச்சுலர் தான். பலரும் பேசுவது போன்று எனக்கு ரகசிய திருமணம் எல்லாம் நடக்கவில்லை. என் வாழ்வில் பல முறை காதல் வந்துள்ளது. நான் பலரை டேட் செய்திருக்கிறேன். பல காதல் முறிவுகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்றார்.

நவ்தீப் தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார் நவ்தீப். அவர் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கிறார். சினிமா, நாட்டு நடப்புகள் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
நடிகர்கள், நடிகைகளுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காதலில் இருக்கும் நடிகை அல்லது நடிகருக்கு விரைவில் திருமணம் என்றும் அவ்வப்போது தகவல் வெளியாவதும் அதை அவர்கள் மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் நவ்தீப் பற்றியும் திருமண செய்தி வெளியாகியுள்ளது.

நவ்தீப் பற்றி திருமண செய்தி மட்டும் அல்ல அவ்வப்போது காதல் பற்றிய செய்திகளும் வெளியாகி வருகின்றன. அவருக்கு என்னப்பா, நேரத்திற்கு ஒரு நடிகையை காதலிக்கிறார் என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நவ்தீப் பற்றி விமர்சனம் செய்வதையும் பார்க்க முடிகிறது.

தெலுங்கு நடிகர் ராணாவுக்கும், மிஹீகா பஜாஜுக்கும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திருமணம் என்று வெளியான தகவலை பார்த்த தெலுங்கு சினிமா ரசிகர்களோ, அப்படி என்றால் அடுத்து நவ்தீப்புக்கு தான் திருமணம் என்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் செம. ராணாவின் பெயர் பல நடிகைகளுடன் சேர்ந்து அடிப்பட்டதாம். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் நடிகைகளை காதலித்த ராணா இறுதியில் டிசைனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்யப் போகிறார்.

ராணாவை போன்றே பல நடிகைகளை காதலித்துள்ள நவ்தீப்பும் விரைவில் செட்டில் ஆவார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்