ஆப்நகரம்

நயன்தாரா படத்துக்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2018, 4:23 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
Samayam Tamil Imaikkaa-Nodigal


நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படம் நேற்று வெளியாகி தற்போது ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. படமும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படமான ‘இமைக்கா நொடிகள்’ ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இந்தப் படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். நயன்தாராவின் தம்பியாக நடிகர் அதர்வா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தற்போது தணிக்கைக்குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்