ஆப்நகரம்

‘இமைக்கா நொடிகள்’ பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது!

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

TNN 16 May 2017, 3:48 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை வெளியாகவுள்ளது.
Samayam Tamil imaikkaa nodigal first look and teaser release date
‘இமைக்கா நொடிகள்’ பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது!


நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வருகிறது இப்படத்துக்குஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துவருகிறார். ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரைவெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக்கை நாளைமாலை 7 மணிக்கும், டீசரை நாளை மறுநாள் 7 மணிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்த 24 மணி நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்