ஆப்நகரம்

அஜித்தின் அடுத்த படத்தில் இமான் அண்ணாச்சி?

அஜித்துடன் அடுத்த படத்தில் காமெடி நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 12 Jul 2017, 6:37 pm
அஜித்துடன் அடுத்த படத்தில் காமெடி நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil imman annachi will act in ajiths next film
அஜித்தின் அடுத்த படத்தில் இமான் அண்ணாச்சி?


நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்தின் படப்பிடிப்பு ஏகதேசம் முடிவடைந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. படத்திற்கான டப்பிங்கை அஜித் மூன்றே நாட்களில் முடித்து விட்டார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. விவேகம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் இவரது அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாதான் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அஜித்துடன் காமெடி வேடத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான இனாம் அண்ணாச்சி கலக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஒரு பாடல் அண்மையில் வெளியாகி சாதனைகளை படைத்துவருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பற்றியும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்