ஆப்நகரம்

ஆடி போய் ஆவணி வந்தால் இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் 2 ஸ்டார்ட்?

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவான இம்சை அரசன் 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஆரம்பமாகயிருக்கிறது.

TNN 12 Aug 2016, 5:14 pm
சிம்பு தேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் வைகைப்புயல் வடிவேல் ஹீரோவாக நடித்த முதல் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. வரலாற்று காமெடி படத்தில் வடிவேலுவுடன் மோனிகா, தேஜா ஸ்ரீ, மனோரமா, இளவரசு, ஸ்ரீமன், நாசர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
Samayam Tamil imsai arasan 23rd pulikecei part 2 start in next month
ஆடி போய் ஆவணி வந்தால் இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் 2 ஸ்டார்ட்?


கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த இப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிம்பு தேவன் இயக்கத்தில் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த பேச்சு வார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

வடிவேலு சம்பளம் காரணமாக இழுத்துக்கொண்டிருந்த இரண்டாம் பாகம் படம் பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில், ஷங்கர் இப்படத்தை தயாரிக்கவில்லை என்கிறது தகவல்.

ஏஜிஎஸ் நிறுவனம் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு ஆவணி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்