ஆப்நகரம்

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யின் இரண்டாம் பாகம் டிராப்பா?

சமீபத்தில் வடிவேலு நடித்து வந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு டிராப்பானதாக கூறப்படுகிறது.

TNN 7 Oct 2017, 3:21 pm
சமீபத்தில் வடிவேலு நடித்து வந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு டிராப்பானதாக கூறப்படுகிறது.
Samayam Tamil imsai arasan 23rd pulikesi 2 movie dropped
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யின் இரண்டாம் பாகம் டிராப்பா?


நடிகர் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய்யடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் காமெடியாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவரது நடிப்பு கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் வடிவேலுவில் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் கூட நடந்து வந்தது, இதனால், ரசிகர்கள் செம்ம குஷியில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு நின்றதாகவும், பிறகு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என தகவலகள் வந்துள்ளது. படக்குழு தான் தெளிவான விளக்கம் தரவேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்