ஆப்நகரம்

Jayalalitha web series: ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக வரும் விஜி!

சீரியலாக உருவாகவுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடரில் அவர் தோழி சசிகலா கேரக்டரில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 16 Feb 2019, 3:56 pm
சீரியலாக உருவாகவுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடரில் அவர் தோழி சசிகலா கேரக்டரில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil chandra


தற்போது பலரும் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக உருவாக்கி வருகின்றனர். இதில் இயக்குனர் கௌதம் மேனன் வாழ்க்கையை தொடராக இயக்கி வருகிறார். இந்தத் தொடரில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார். அவரது தோழி சசிகலா கேரக்டரில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார்.

மற்றும் இயக்குனர் பிரியதர்ஷினி, ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர்கள் லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குனர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.

கௌதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை வெப் சீரியலாக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சீரியலில் சோபன் பாபுவாக, வம்சி கிருஷ்ணாவும், எம்.ஜி.ஆராக இந்திரஜித்துவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்