ஆப்நகரம்

ரஜினி, கமல், அஜித் இவங்க யாருமில்ல: தென்னிந்தியாவிலேயே விஜய் தான் நம்பர் 1!

தென்னிந்தியாவிலேயே விஜய் தான் நம்பர் ஒன் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Mar 2018, 2:53 pm
தென்னிந்தியாவிலேயே விஜய் தான் நம்பர் ஒன் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil in south indian cinemas thalapathy vijay is number one hero
ரஜினி, கமல், அஜித் இவங்க யாருமில்ல: தென்னிந்தியாவிலேயே விஜய் தான் நம்பர் 1!


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்காக விரைவில் கொல்கத்தா செல்லயிருக்கிறார். இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் நட்சத்திரங்கள் யார் என்றால் அது முதலில் ரஜினிகாந்த், சிரஞ்சீவியாகத்தான் இருந்தது.

இணையதளங்களைப் பொறுத்த வரை விஜய், அஜித், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகிய ஹீரோக்களின் ரசிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேர் பார்த்து ரசித்த டீசராக மெர்சல் உள்ளது. இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும், இப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் எங்கு ஒளிபரப்பினாலும் அதற்கான குத்தாட்டமும், கொண்டாட்டமும் இன்னமும் குறையவில்லை.

அப்படித்தான், கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் ஆளப்போறான் தமிழன் பாடல் போடப்பட்டது. அதனை கேட்டு விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது. ரஜினியின் கபாலி படம் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும், பாகுபலி டிரைலர் இதைவிட அதிகம் என்றாலும், அதன் மார்க்கெட் வேறு. ஆனால், ஒரு ஹீரோவாக பெரிய ஹிட் கொண்டு வரும் பட்டியலில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்