ஆப்நகரம்

GAJA CYCLONE: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பிரபலங்களின் பட்டியல்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவக்குமார் என்று நடிகர்கள் பலரும் நிதி நிவாரணம் அளித்து வருகின்றனர்.

Samayam Tamil 21 Nov 2018, 1:06 pm
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவக்குமார் என்று நடிகர்கள் பலரும் நிதி நிவாரணம் அளித்து வருகின்றனர்.
Samayam Tamil gaja


கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக, நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் யாரெல்லாம் நிதி நிவாரணம் அளித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

கஜா புயல்: நடிகா் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி

கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நடிகர் விக்ரம் ரூ.25 லட்சம் நிதியுதவி!

லைகா புரோடக்‌ஷன் நிறுவனம் (அல்லிராஜா சுபாஷ்கரன்) – ரூ.1.1 கோடி

ரஜினிகாந்த் (மக்கள் மன்றத்தின் மூலம்) – ரூ.50 லட்சம்

நடிகர் விக்ரம் - ரூ.25 லட்சம்

சிவகார்த்திகேயன் – ரூ.10 லட்சம்

சிவக்குமார் குடும்பத்தினர் – ரூ.50 லட்சம்

விஜய் (டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைக்கு ஏற்ப விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு வங்கி கணக்கின் மூலம்)– ரூ.4.5 லட்சம்

விஜய் சேதுபதி – ரூ.25 லட்சம்

கவிஞர் வைரமுத்து – ரூ.5 லட்சம்

இயக்குனர் ஷங்கர் – ரூ.10 லட்சம்

ஏ.ஆர்.ரஹ்மான் – அடுத்த மாதம் 24ம் தேதி கனடாவில் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்