ஆப்நகரம்

Vijay sethupathi: விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு?

தற்போது தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 28 Sep 2018, 4:19 pm
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. சமூகத்தில் நடக்கும் பாகுபாடு குறித்து பல இடங்களில் பேசி வரும் விஜய் சேதுபதி வீட்டியில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil vijay sethupathi


2010ல் தென் மேற்கு பருவக்காற்று படத்திலிருந்து ஹீரோவாக நடித்து வருகின்றார். அதற்கு 5 வருடங்களுக்கு முன் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

அவர் நடித்த பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்(2012) மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சிறந்த படமாக அமைந்தது.
மேலும் அவரின் மிகச்சிறப்பான நடிப்பின் காரணமாக முன்னனி நடிகராக உயர்ந்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிறந்த விஜய் சேதுபதி, தற்போது சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் அவரின் வீடு மற்றும் அல்வலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தப்பட்டதாகவும், இன்று வழக்கமான ஆய்வு செய்யப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தகவல்:
விஜய் சேதுபதி வருமான வரித்தாக்கல் செய்த நிலையில் சில கோப்புகள் சமர்பிக்க மறந்துவிட்டார். அதனால் அதை வாங்க வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிப்பில் செக்கச் சிவந்த வானம் நேற்று வெளியானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்