ஆப்நகரம்

இந்தியன் 2 செட் விபத்தில் இறந்த கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன்

இந்தியன் 2 செட்டில் நடந்த விபத்தில் பலியான உதவி இயக்குநர் கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார்.

Samayam Tamil 20 Feb 2020, 10:44 am
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு செட் அமைக்கும் பணி நடந்தபோது கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவியாளர் மது(29), உதவி இயக்குநர் கிருஷ்ணா(34), ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகியோர் உயிர் இழந்தனர்.
Samayam Tamil indian 2


உயிர் இழந்த கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட்டும், சினிமா விமர்சகருமான மதனின் மருமகன் ஆவார். கமல் ஹாஸனின் நெருங்கிய நண்பரான மதன் அவரின் அன்பே சிவம் படத்திற்கு வசனம் எழுந்தியவர்.

கிருஷ்ணாவும், மதனின் இளைய மகள் அமிதாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இந்தியன் 2 செட்டில் நடந்த விபத்தால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்தியன் 2 செட் விபத்தில் பலியான கிருஷ்ணா என் தோழியின் கணவர்: காயத்ரி ரகுராம்

3 பேரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு கமல் ஹாஸன், காஜல் அகர்வால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தபோது ஷங்கரும் சம்பவ இடத்தில் தான் இருந்துள்ளார். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். விபத்தில் காயம் அடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் 2 செட் விபத்தில் 3 பேர் பலி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷங்கர்

இதற்கிடையே தலைமறைவாக உள்ள கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது நசரத்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்