ஆப்நகரம்

Hot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் சிகப்பு கலர் உடையில் செக்ஸியாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 May 2019, 1:37 pm
நடிகை காஜல் அகர்வால் சிகப்பு கலர் உடையில் செக்ஸியாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil wal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அனுஷ்காவிற்கு அடுத்த வரிசையில், நயன்தாராவை போன்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பரத் நடிப்பில் வந்த பழனி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், விஜய் நடிப்பில் வந்த துப்பாக்கி படம் தான் தமிழில் காஜல் அகர்வாலுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து 2ஆவது முறையாக ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். மறுபடியும் மெர்சல் படத்தில் ஜோடி சேர்ந்தார். இதற்கு முன்னதாக விவேகம் படத்தில் அஜித்துடன் இணைந்து அவருக்கு மனைவியாக நடித்துள்ளார்.



இந்த நிலையில், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2021ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்துள்ள சீதா என்ற படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் காஜல் அகர்வால் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் மற்றும் செக்ஸி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிகப்பு நிற உடையில் இருக்கும் அந்தப் புகைப்படம் காண்போரை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருக்கிறது என்று குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்