ஆப்நகரம்

வெட்கத்தை விட்டு கேட்ட விஜய் சேதுபதி: உடனே ஆக்ஷனில் இறங்கிய கமல்

உங்கள் நான் நிகழ்ச்சி மேடையில் விஜய் சேதுபதி தெரிவித்த ஆசை அதற்குள் நிறைவேறிவிட்டது.

Samayam Tamil 24 Nov 2019, 1:00 pm
உங்கள் நான் நிகழ்ச்சி மேடையில் விஜய் சேதுபதி தெரிவித்த ஆசை அதற்குள் நிறைவேறிவிட்டது.
Samayam Tamil indian 2 kamal haasan fulfills vijay sethupathis wish
வெட்கத்தை விட்டு கேட்ட விஜய் சேதுபதி: உடனே ஆக்ஷனில் இறங்கிய கமல்


விஜய் சேதுபதியின் கோரிக்கை

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரை தேடி வந்த வாய்ப்பை அவரால் ஏற்க முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, உங்கள் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது, ஒரு சான்ஸ் கொடுங்க சார் என்று கமலிடம் கோரிக்கை விடுத்தார். அவர் கோரிக்கை விடுத்த ஒரு வாரத்தில் அது நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 வில்லன் விஜய் சேதுபதி

இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, இந்தியன் 2 படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார் விஜய் சேதுபதி. அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் ஆசையை கமல் ஹாஸன் இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி வைப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

டிராக் மாறும் விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. அதில் இருந்து தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களாக தேர்வு செய்து கொண்டிருக்கிறார் அவர். ரஜினியை அடுத்து விஜய்க்கு வில்லனாக தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் அடுத்த மாதம் கலந்து கொள்வாராம். இந்நிலையில் கமலுக்கும் வில்லனாகியுள்ளார். கஷ்டப்பட்டு ஹீரோவாகிவிட்டு இப்படி வில்லனாகிவிட்டாரே. இந்த விஜய் சேதுபதி கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல பரமா.

மக்கள் வில்லன்

ரசிகர்கள் விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் அவர் மக்கள் வில்லன் ஆகிவிடுவார் போன்று. தெலுங்கு திரையுலகிலும் அடுத்தடுத்த படங்களில் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஏன் இப்படி கெளம்பிட்டீங்க விஜய் சேதுபதி என்று கேட்டால், கதாபாத்திரம் நல்லா இருக்குல்ல என்கிறார். என்னமோ போங்க.

அடுத்த செய்தி

டிரெண்டிங்