ஆப்நகரம்

இந்தியன் 2 - தயாரிப்பாளரை மாற்ற முடிவு? ஷங்கர்!

நடிகர் கமல்ஹாசனின் கால்ஷீட்டால் ‘இந்தியன் 2’ படத்திற்கு சரியான பட்ஜெட்டை கொடுக்க முடியாமல் தற்போது திணறி வருகிறார் இயககுனர் ஷங்கர்.

Samayam Tamil 20 Feb 2019, 3:21 pm
1996ல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கமல், கஸ்தூரி, சுகன்யா, கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
Samayam Tamil indian2


தற்போது இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்தும் நடுவே பட்ஜெட் தொடர்பாக பெரும் மனக் கசப்புகள் இருந்து வருகிறது. படத்தின் முழுமையான பட்ஜெட் குறித்து தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் ஷங்கரிடம் கேட்க, கமல் எப்போது கால்ஷீட் தருவார் என்று தெரியாத நிலையில் எப்படி தரமுடியும் என்ற நிலையில் இருக்கிறார் ஷங்கர்.

ஆகவே தயாரிப்பாளர் பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறாராம் சங்கர். மேலும், ‘இந்தியன் 2’ படத்தை வேறு தயாரிப்பு நிர்வாகத்திற்கு கைமாற்றிவிடலாமா என்ற முடிவிலும் யோசித்து வருகிறார் ஷங்கர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்