ஆப்நகரம்

'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிட சென்னி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

TNN 8 Nov 2016, 1:11 pm
சென்னை: இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிட சென்னி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Samayam Tamil interim ban for g v prakash kumars kadavul irukkaan kumaru
'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு


அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற வியாழக்கிழமை(நவ.10) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தரவேண்டும் என்றும் அவர் தலைமறைவாக இருப்பதால் அவருடைய பங்குதாரர் டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் பேனரில் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி மெரினா பிக்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் சிங்காரவேலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
Applause 2 our Dir.Rajesh Team-Kadavul Irrukaan Kumaaru Censored"U".Relasing Nov10th @rajeshmdirector @gvprakash @nikkigalrani @prakashraaj pic.twitter.com/Z7AS5N39HG — T Siva AmmaCreations (@TSivaAmma) November 4, 2016 இப்படத்தை வெளியிட்டு விட்டால் தன்னால் பணத்தை வசூலிக்க முடியாது எனவும் லிங்கா சிங்காரவேலன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்ற இப்படத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்