ஆப்நகரம்

பெங்களூரில் பிப்ரவரியில் சர்வதேச திரைப்பட விழா!

ஆண்டுதோறும் பெங்களூரில் பிப்ரவரி மாதம் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.

TOI Contributor 30 Dec 2016, 3:37 pm
ஆண்டுதோறும் பெங்களூரில் பிப்ரவரி மாதம் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil international film festival at bangalore
பெங்களூரில் பிப்ரவரியில் சர்வதேச திரைப்பட விழா!


பெங்களூரில் 9வது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடைபெறுகிறது.

இவ்விழா பெங்களூரில் 11 திரையரங்குகளிலும், மைசூரில் 4 திரையரங்குகளிலும் நடக்கிறது. இதில் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. ஆசிய திரைப்படங்கள், இந்திய திரைப்படங்கள், கன்னட திரைப்படங்கள், பொழுதுபோக்கு திரைப்படங்கள், பெண் இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள் என தனித்தனியாக போட்டி பிரிவில் திரையிடப்படுகிறது. இதன் துவக்க விழா பெங்களூருவிலும், நிறைவு விழா மங்களூருவிலும் நடக்க இருக்கிறது. தென்னிந்திய திரைக் கலைஞர்கள் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தத் தகவலை கர்நாடக மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை முதன்மை செயலளார் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்