ஆப்நகரம்

தாய் மரணம்: கடைசியாக முகத்தை பார்க்க முடியாமல் நடிகர் லண்டனில் தவிப்பு

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

Samayam Tamil 26 Apr 2020, 11:21 am
பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் அம்மா சயீதா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வசித்து வந்த 95 வயதான சயீதா உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
Samayam Tamil irrfan khan


இர்ஃபான் சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்ற நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை பூதாகரமாக வெடித்து ஊரடங்கு உத்தரவு அமல்படுப்பட்டது. இதனால் வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட இர்ஃபானால் தாயின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை.

தாயை இழந்து வாடும் இர்ஃபான் கானுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இர்ஃபான் கான் புற்றுநோய்க்காக லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் லண்டனுக்கு சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

அவரின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது தான் அங்கு சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இர்ஃபான் கான் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அங்ரேஜி மீடியம். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இர்ஃபானால் கலந்து கொள்ள முடியாமல் போனது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்