ஆப்நகரம்

Irumbu Thirai: ’இரும்புத்திரை’ வெளிவருவதில் புது சிக்கல்: முதல்வரிடம் புகார் அளிக்க படக்குழு முடிவு

திரைப்பட விநியோகஸ்தரான பி.டி செல்வக்குமார் இரும்புத்திரை படத்தை வெளியிடுவதற்கு தனக்கு சிலர் சிக்கல் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 May 2018, 2:02 pm
திரைப்பட விநியோகஸ்தரான பி.டி செல்வக்குமார் இரும்புத்திரை படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு தனக்கு சிலர் சிக்கல் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil irumbuthirai-shooting-spot-vishal-with-director-thiru
’இரும்புத்திரை’ படத்திற்கு புதிய சிக்கல்


தமிழ் திரைப்பட கலைஞர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்ததால் சுமார் 45 நாட்களுக்கு தமிழில் எந்த புதிய படங்களும் வெளிவரவில்லை. தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏற்கனவே வெளிவரவேண்டிய படங்களுடன், பல புதிய படங்களும் ரீலிஸுக்காக வரிசைக்கட்டி நிற்கின்றன.

விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் இரும்புத்திரை. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில், இரும்புத்திரை பட விநியோகஸ்தரான பி.டி. செல்வக்குமார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இரும்புத்திரை படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு அருள்பதி என்ற விநியோகஸ்தர் இடையூறு செய்து வருவதாகவும், படத்தை வாங்க மறுக்குமாறு சில திரையரங்க உரிமையாளருக்கு அருள்பதி நெருக்கடி கொடுப்பதாகவும் பி.டி. செல்வக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் முதலமைச்சர் பழனிசாமியிடம் இரும்புத்திரை படம் வெளிவருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து புகார் அளிக்கவுள்ளார். இதற்காக முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகத்தில் நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழகத்தில் இரும்புத்திரை படத்தை வாங்கி விற்கும் விநியோகஸ்தர்கள் சிலர் 5 % கமிஷன் எதிர்பார்க்கின்றனர். அதனால் தயாரிப்பாளருக்கு கூடுதல் பணச்சுமை ஏற்படுகிறது. அதை தர மறுத்தால் தற்போது படத்தின் வெளியீட்டை தடுக்க அருள்பதி உள்ளிட்ட சிலர் முயற்சி செய்வதாக பி.டி. செல்வக்குமார் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே பல நாட்கள் காத்திருந்து திரைக்கு வரும் விஷால் படத்திற்கு, விநியோகஸ்தர் அருள்பதி ரூபத்தில் புதிய சிக்கல் முலைத்துள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி மே- 11ம் தேதி ’இரும்புத்திரை’ திரை வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்