ஆப்நகரம்

மிலிட்டரி மேனாக வரும் விஷாலின் இரும்புத்திரை படத்தின் டீசர்!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

TNN 29 Dec 2017, 7:55 pm
விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil irumbuthirai official teaser
மிலிட்டரி மேனாக வரும் விஷாலின் இரும்புத்திரை படத்தின் டீசர்!


துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் இரும்புத்திரை. முதல் முறையாக இராணுவ வீரனாக நடிக்கும் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அதுவும் மன நல மருத்துவராக நடிக்கிறாராம். மித்ரன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்