ஆப்நகரம்

சீயான் விக்ரமின் வேற லெவல் 'இருமுகன்' டீசர்

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இரு முகன்' படத்தின் டீசர் வெளியானது.

TNN 18 Apr 2016, 10:46 am
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இரு முகன்' படத்தின் டீசர் வெளியானது.
Samayam Tamil irumugan teaser unveiled
சீயான் விக்ரமின் வேற லெவல் 'இருமுகன்' டீசர்


சீயான் விக்ரமின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக 50 நொடி கொண்ட இருமுகன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். தற்போது வரை 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

அறிவியல் சார்ந்த திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நடித்துள்ளனர். இப்படத்தில் நயன்தாரா உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மலேசியா, சென்னை, பெங்களூரு, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்