ஆப்நகரம்

தல 61: சூப்பர்ஹிட் இயக்குனருடன் அஜித் மீண்டும் கூட்டணி?

தல 61 படத்திற்காக அஜித் மீண்டும் விஷ்ணுவர்தன் உடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 12 Jun 2020, 10:09 am
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் தல அஜித். அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், ரசிகர்களை சந்திப்பதையும் முழுமையாக தவிர்த்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் தொடர்ந்து அப்படியே தான் இருக்கிறது. அவரது படங்களை தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடும் ரசிகர்களும் இருக்கின்றனர்.
Samayam Tamil Ajith teaming up again with Vishnuvardhan?


தற்போது அஜித் வலிமை படத்தில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹெச் வினோத் இயக்கிவரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அதனை தொடர்ந்து சென்னையில் ஷூட்டிங் நடந்தது. அதன்பின் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் ஷூட்டிங் துவங்க முடியாத சூழ்நிலை தான் நிலவுகிறது.

கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு ஷூட்டிங் முழு வீச்சில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வலிமை அப்டேட் கொடுங்கள் இந்நிலையை அஜித்தின் அடுத்த படம் தல 61 பற்றிய சில தகவல்கள் பரவி வருகின்றது.

பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் உடன் தான் அஜித் மீண்டும் கூட்டணி சேர்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் இணைய வாய்ப்புள்ளது என கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் அஜித்துக்கு விஷ்ணுவர்தன் ஒரு புதிய கதையை கூறியதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிடவே உடனே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என கூறப்படுகிறது. இந்த படம் முன்பு வெளியான இரண்டு படங்களை விட மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் அஜித் வலிமை படத்தை முடித்தபிறகு தான் தனது அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் ஹெச் வினோத் உடன் கூட்டணி சேரும் இரண்டாவது படம் இது. கொரோனா பிரச்சனை காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் அப்டேட் ஏதாவது கொடுங்கள் என தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

ஆனால் கொரோனா பிரச்சனை முடியும் வரை எந்த விதமான விளம்பரப்படுத்தும் பணிகளையும் செய்யபோவத்தில்லை என போனி கபூர் முன்பே அறிவித்திருந்தார். அதனால் தான் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளுக்கு கூட எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை.

கொரோனாவால் வலிமை படத்திற்கு மேலும் ஒரு சிக்கலும் வந்துள்ளது. இயக்குனர் வினோத் வலிமை படத்தின் முக்கிய சண்டை காட்சிகளை ஸ்பெயின் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் படமாக்க திட்டம் போட்டு இருந்தார். ஆனால் கொரோனா பிரச்சனை காரணாமாக வெளிநாடுகளுக்கு சென்று ஷூட்டிங் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் முழுவதும் இந்தியாவில் நடப்பது போலவே கதையை மாற்ற வினோத் பரிசீலித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்