ஆப்நகரம்

கல்யாணத்தை மறைக்கலாம், கர்ப்பத்தை மறைக்க முடியுமா?

தான் கருவுற்றிருப்பதாக வதந்தி பரவுவது பற்றி பேசியுள்ள பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, கல்யாணத்தை மறைக்கலாம், கர்ப்பத்தை மறைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

Samayam Tamil 5 Dec 2018, 4:32 pm
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா சர்மா. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை திருமணம் செய்துகொண்டார்.
Samayam Tamil 44324358_563126514124756_1133340284479987699_n


இந்நிலையில், அனுஷ்கா சர்மா கருவுற்றிருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இது குறித்து பதில் கூறியுள்ள அனுஷ்கா சர்மா, “இப்படி ஏதாவது வதந்திகளைப் பரப்பிக்கொண்டுதான் இருப்பார்கள். கல்யாணத்தை மறைக்கலாம், கர்ப்பத்தை மறைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “எல்லா நடிகைகளும் இதுபோன்ற வதந்தியைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். ஒரு நடிகை கர்ப்பமாவதற்கு முன்பே அவரைத் தாய் ஆக்கிவிடுகிறார்கள்.” என்று கூறிய அவர், “இதைப் போன்ற விஷயங்களைப் படிக்கும்போது, எங்கிருந்து இந்த முட்டாள்தனமான வதந்திகள் கிளம்பி வருகின்றன? என்றுதான் நினைத்துக்கொள்வேன்” எனவும் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்