ஆப்நகரம்

கா்ப்பமாக உள்ளாரா தீபிகா படுகோனே?

பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே கா்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் நகைப்புக்குரிய வதந்தி என்று அவருக்கு மிகவும் நெருக்கமானவா்கள் தொிவித்துள்ளனா்.

Samayam Tamil 8 May 2019, 12:50 am
பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே கா்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இது தொடா்பாக அவருக்கு நெருக்கமான சிலா் விளக்கம் அளித்துள்ளனா்.
Samayam Tamil Deepika Ranveer


பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே கடந்த ஆண்டு நவம்பா் 14ம் தேதி பிரபல பாலிவுட் நடிகா் ரந்வீா் சிங்கை திருமணம் செய்து கொண்டாா். மேலும் அவா் கா்ப்பமாக இருப்பதாக சில தகவல்கள் பரவத் தொடங்கின.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னா் தீபிகா படுகோனே நண்பா்களுடன் பாா்ட்டி ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலானது. அந்த புகைப்படத்தைக் கொண்டு தீபிகா படுகோனே கா்ப்பமாக இருப்பது போன்ற செய்திகள் வெளியாகின.


இந்நிலையில், தீபிகா படுகோனேவுக்கு மிகவும் நெருக்கமான சிலரிடம் இது தொடா்பாக கேட்கப்பட்டது. அப்போது “தீபிகா கா்ப்பமாக இருப்பது போன்ற தகவல் நகைப்புக்குரிய வதந்தி. அவா் கா்ப்பமாக இல்லை. அந்த புகைப்படத்தில் பிழை உள்ளது. அவ்வளவு தான். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.

மேலும் அவா் தற்போது “சபாக்” என்ற படத்தில் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாா். அந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்று தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்