ஆப்நகரம்

Pattas: விஜய்க்கு ஆட்டம் காட்ட ரெடியாகும் தனுஷ்? தீபாவளிக்கு பிகில் – பட்டாஸ் மோதல்?

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து பிலில் படத்திற்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்படும் நிலை வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 30 Jul 2019, 6:18 pm
பொங்கல் தீபாவளி நாட்களில் முன்னணி நடிகரின் படங்கள் மோதுவது வழக்கம். இப்போது தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் படம் தயாராகி வருகிறது. இப்படம் தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படத்துடன் மோதுவதாக தகவல் வந்துள்ளது. ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Samayam Tamil pattas bigil


ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் - தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். இப்படத்தை டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

Also Read: Pattas First Look: அட, தனுஷின் பட்டாஸ் போஸ்டரில் இத்தனை விஷயம் இருக்கா?

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகத்தீவிரமகா நடைப்பெற்று வரும் வேளையில் படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் பிகில்.தெறி மற்றும் மெர்சல் படத்தைத் தொடர்ந்து அட்லியும் விஜய்யும் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளனர். அட்லி மாஸ், கமர்ஷியல் ஃபார்முலாவை இந்தப் படத்திலும் கடைபிடிப்பார் என்று சொல்லலாம்.

ALso Read: Asuran Title Card: எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் வேணாம்: இது மட்டும் போதும்: தனுஷ்!

இப்படத்தில் விஜய்க்குநயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறாரகள். ஜாக்கி ஷெராப் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படததை தயாரிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய விஷ்னு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் இப்படத்தில் அப்ப, மகன் இரு வேடங்களில் நடிக்கிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு கோச்சாகவும், அப்பா விஜய் தாதாவாகவும் நடிப்பதாக தெரிகிறது.

Also Read: Bindu Madhavi: அமலா போல் ஆடையின்றி நடிப்பேன்...பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் அசத்தல் பேட்டி!!


இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது.இப்படத்தில் வியாபாரங்கள் முடிந்து இப்படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதனால் விஜய் படமும் தனுஷ் படமும் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ் விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்