ஆப்நகரம்

எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டாரே!

எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டாரே என்று நடிகை திஷா பதானியை எல்லோரும் ஆச்சரியமுடன் பார்க்கின்றனர்.

TNN 21 Jun 2017, 4:18 pm
எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டாரே என்று நடிகை திஷா பதானியை எல்லோரும் ஆச்சரியமுடன் பார்க்கின்றனர்.
Samayam Tamil is it dhisha patani
எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டாரே!


உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் திஷா பதானி லோபர். இவர் தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ‘டோணி’ படத்தில் கூல் கேப்டனின் காதலி பிரியங்காவாக நடித்து பிரபலம் ஆனார். யார் இந்த பொண்ணு என்று அனைவரையும் கேட்க வைத்தார். கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸுடன் நடித்தார். அந்த விளம்பரம் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பூசினாற் போன்று இருந்த திஷா பதானி தற்போது தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார். அவரின் பழைய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வரைலாகியுள்ளது. திஷா பதானியும், பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறார்களாம்.

டைகர் நடித்த பாகி இந்தி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். இந்த படத்தில் டைகருக்கு ஜோடியாக திஷா நடிக்கிறார். முதல் பாகத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்தார். திஷா பதானி அவ்வப்போது தனது பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட பூப்போட்ட பிகினி போட்டோவை வெளியிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்