ஆப்நகரம்

கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்? மாப்பிள்ளை பற்றி பரவும் தகவல்

நடிகை கீர்த்தி சுரெஷுக்கு விரைவில் திருமணம் என செய்தி பரவி வருகிறது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மணக்கிறார் என கூறப்படுகிறது.

Samayam Tamil 2 Apr 2020, 10:59 pm
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். நடிகையர் திலகம் படத்தில் அவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைத்த பிறகு இந்தியாவே அவரை திரும்பி பார்த்தது. அதன் பிறகு அவருக்கு சில ஹிந்தி பட வாய்ப்புகளும் கிடைத்தது.
Samayam Tamil Keerthy Suresh


அதற்காக அவர் அதிகம் கஷ்டப்பட்டு தன் உடல் எடையை குறைத்துள்ளார். அவரது ஒல்லியான தோற்றம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. அடுத்து அவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அந்த அப்படத்தில் அவர் ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார்.

இந்நிலையில் கீர்த்திக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து மாப்பிள்ளை பார்க்க துவங்கிவிட்டனர் என கூறப்படுகிறது. கீர்த்தியின் அப்பா பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். அதே கட்சியுடன் தொடர்பில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் மகனை தான் கீர்த்திக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்துள்ளனர் என தகவல் பரவி வருகிறது.

இது உண்மையா என்பது சரியாக தெரியவில்லை. இது பற்றி அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. திருமணம் உறுதியான பிறகு அதிகார்பூர்வ அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் தரப்பில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்