ஆப்நகரம்

Muttiah Muralitharan: முத்தையா முரளிதரன் பயோபிக்லிருந்து விஜய் சேதுபதி விலகினாரா?

இலங்கை கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த வீரராக கருத்தப்படும் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Samayam Tamil 10 Aug 2019, 4:57 pm
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் வேற்று நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகப் போகிறது என்றும் அதில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதாக தகவல் வந்துள்ளது. தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் முத்தையா முரளிதரன் ஆக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
Samayam Tamil Makkal Selvan Vijay Sethupathi


Also Read: Keerthy Suresh: தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா?

இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் மோஷன் ,"உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் காலங்களையும் வெள்ளித்திரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம். இப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்லவிருக்கிறோம். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.திரு எம் எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது என்று அறிவித்திருந்தது.

Also Read: Rajinikanth: நடிகையின் அழுகுரல் கேட்டு உதவிக்கரம் நீட்டிய ரஜினிகாந்த்!

இப்படத்தைப் பற்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,"திரு முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தமிழ் விளையாட்டு வீரர்களின் ஒரு சின்னமாக திகழும் முத்தையா முரளிதரன், உலகெங்கும் தன் திறமையை நிரூபித்துள்ளார். முரளியின் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப் போகிறது. இந்த சவாலை நான் ஆவலோடு எதிர் கொள்ள காத்திருக்கிறேன். முரளி அவர்களே எங்களுடன் இப்படத்தில் பணியாற்றுவார் என்பதை அறிந்தும் அவர் தாமே எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களைப் பற்றி அறிவுரை வழங்குவார் என்பதை அறிந்தும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Also Read: விஜய்யின் பிகில் பட ஷூட்டிங்கில் காயமடைந்தவர் பரிதாப மரணம்!

என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் முரளி அவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனக் கூறியிருந்தார். இந்த நிலையில்தமிழீல ஆதரவாளர்கள் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களிடத்தில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ் ஈழத்துக்கு எதிராக இருந்த முத்தையா முரளிதரன் அவர்களின் பயோபிக்கில் நடிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் சேதுபதி தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி எந்த அரசியலிலும் சிக்கிக் கொள்ளாமல் மக்களின் கருத்துக்கு மதிப்பு தருபவர். வீணான பிரச்சனைகளை தவிர்க்க அவர் இம்முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் தயாரிப்பு தரப்ப்பு இது சம்பந்தமாக என்ன முடிவு எடுக்க உள்ளது என்பது தெரியவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்