ஆப்நகரம்

Meena: மீனாவை திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை இவர் தானா?

Meena Second Marriage: நடிகை மீனா இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதையடுத்து அவருக்கு ஏற்ற மாப்பிள்ளையை குடும்பத்தார் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 30 Nov 2022, 10:27 am
குடும்பத்தார் வலியுறுத்தியதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் மீனா. அவரை திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil is meena going to marry this person
Meena: மீனாவை திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை இவர் தானா?


மீனா

கணவரை இழந்து வாடும் மீனா தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மகள் நைனிகாவுக்காக மறுமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் மீனாவிடம் தெரிவித்துள்ளனர். முதலில் முடியவே முடியாது என்று கூறியிருக்கிறார். பின்னர் தன் செல்ல மகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து மறுமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் மீனா. இருப்பினும் இந்த தகவலை மீனா இதுவரை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை குறித்த விபரம் வெளியாகியிருக்கிறது.

மாப்பிள்ளை

மீனா மனம் மாறிய கையோடு மாப்பிள்ளையை முடிவு செய்துவிட்டார்களாம். மீனாவின் குடும்ப நண்பர் தான் அந்த மாப்பிள்ளையாம். இதை மீனாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். மீனா மறுமணம் செய்ய சம்மதம் தெரிவித்திருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஊர் பேச்சை கேட்காமல் நைனிகாவுக்காக நல்ல முடிவு எடுத்திருக்கிறார் மீனா என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருமணம்

முன்னதாக மீனாவுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வித்யாசாகருக்கும் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறார். நைனிகா தன் 5வது வயதில் நடிகையாகிவிட்டார். விஜய்யின் தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

வித்யாசாகர்

வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வந்தது. இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்த அவருக்கு வைரல் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டது. இதனால் அவரின் உடல்நலம் மோசமானது. வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாரிசு

வித்யாசாகருக்கு சரியான நேரத்தில் நுரையீரல் தானம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீனா தான் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தார். முதலில் வீட்டிலேயே முடங்கிய மீனாவை அவரின் தோழிகள் தான் மெல்ல மெல்ல வெளியே அழைத்து வந்தார்கள். அதன் பிறகு அவர் படப்பிடிப்புகளுக்கு செல்லத் துவங்கிவிட்டார். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தில் நடித்துள்ளார் மீனா. வாரிசு படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்