ஆப்நகரம்

கடவுள் பெயரில் டிவி சேனலா? ரசிகர்கள் வருத்தம்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் கடவுள் பெயரில் டிவி சேனல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Samayam Tamil 2 Nov 2019, 6:38 pm
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவேன். போர் வரும் போது களத்தில் சந்திப்போம் என்றார்.
Samayam Tamil Rajinikanth TV Channel


Indraja Shankar: குண்டம்மா என்று சொன்னதற்காக விஜய் மன்னிப்பு கேட்டார்: ரோபோ சங்கர் மகள்!

ஆன்மீக அரசியல் அறிவிப்பு வெளியான பிறகு மாவட்டந்தோறும் நிர்வாகிகள், உறுப்பினர்களை நியமித்தார். ரஜினி ரசிகர் மன்றம் என்பதை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இப்படி பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக கட்சி பெயரையோ, கொடியையோ ரஜினிகாந்த் அறிவிக்கவில்லை. இதுவே ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவும், ஏக்கமாகவும் இருக்கிறது.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்ககும் பிங்க்! ஹீரோ யார் தெரியுமா?

இந்த நிலையில், கட்சி தொடங்குவதற்கு முன்னதாக டிவி சேனல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அது, ரஜினி டிவி அல்லது தலைவர் டிவியாக இருக்கலாம் என்று கூறபட்டது. தற்போது கடவுள் பெயரில் தான் ரஜினிகாந்த் டிவி சேனல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ராகவேந்திரா டிவி அல்லது பாபா டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rowdy Baby: ரௌடி பேபி பாடலுக்கு ரொமான்ஸ் ஆட்டம் போட்ட நடிகை கிரண்!

இதையறிந்த ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள், ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். இவர்களில் சிலர், நாத்திகவாதிகளாகவும் உள்ளனர். ரசிகர்கள் எல்லாம், ரஜினியை தெய்வமாக வழிபடுகின்றனர். அப்படியிருக்கும் போது அவர்கள் விரும்புவது எல்லாமே ரஜினி டிவி அல்லது தலைவர் டிவி.

ஆதலால், இந்த பெயரிலேயே டிவி சேனல் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வருகிறது. இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படத்திற்கு வியூகம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்