ஆப்நகரம்

ராணாவுக்கும், எனக்கும் காதலா? விளக்கம் கொடுத்த ரகுல்!

தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்படும் வதந்திக்கு ரகுல் ப்ரீத் சிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Samayam Tamil 30 Jan 2018, 1:46 pm
தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்படும் வதந்திக்கு ரகுல் ப்ரீத் சிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Samayam Tamil is rakul preet singh dating baahubali star rana daggubati the aiyaary actress answers
ராணாவுக்கும், எனக்கும் காதலா? விளக்கம் கொடுத்த ரகுல்!


பாகுபலி படத்தின் வில்லனான ராணா டகுபதி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். ஏற்கனவே ராணாவுடன் இணைத்து நடிகை த்ரிஷா பேசப்பட்டார். இருவரும் ஜோடியாக சுற்றிய படங்களும் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ராணாவும், ரகுல் ப்ரீத் சிங்கும் காதலிப்பதாக தெலுங்கு படவுலகில் தகவல் பரவி வருகிறது.

இது தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், நானும், ராணாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். எங்களின் நண்பர்கள் குழுவில் உள்ள 20 பேருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாங்கள் அனைவருமே எப்போதும் நட்புடன் தான் இருக்கிறோம். இந்த நிலையில், ராணாவுக்கும், எனக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது என்று வரும் வதந்திகளை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது என்று கூறியுள்ளார்.



ஆனால், இந்த காதலுக்கு ரகுல் ப்ரீத் சிங் மறுப்பு தெரிவித்தாலும், இந்த காதல் விவகாரம் உண்மை தான் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

We have been constantly fed with the idea that 'Ek Ladka Aur Ek Ladki Kabhi Dost Nahi Ho Sakte', thanks to the mushy, romantic Bollywood movies. Every time paparazzi lays its eyes on two stars walking out of the airport together or casually smoking on the streets, the reward is a 'dating' label. Especially in the case of these superstars who live under the spotlight as every detail about their personal and professional life makes headlines. Case in point is Aiyaary actress Rakul Preet Singh being linked to Baahubali: The Beginning star Rana Daggubati

அடுத்த செய்தி

டிரெண்டிங்