ஆப்நகரம்

இது கார்த்தியின் சார்பட்டா பரம்பரையா?

ஆர்யா படத்திற்கு சார்பட்டா பரம்பரை என்று தலைப்பு வைத்திருப்பதை பார்த்தால் கார்த்தி நினைவு தான் வருகிறது.

Samayam Tamil 2 Dec 2020, 2:22 pm
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு சார்பட்டா பரம்பரை என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரை பார்த்த திரையுலகினர், ரசிகர்கள் என்று பலரும் ஆர்யாவின் பாடியை பார்த்து அசந்துவிட்டனர்.
Samayam Tamil sarpatta


பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா: ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்

ஆர்யாவின் கடின உழைப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சார்பட்டா பரம்பரை என்கிற தலைப்பை பார்த்ததுமே பலருக்கு கார்த்தியின் நினைவு வந்திருக்கலாம், தப்பில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி சார்பட்டா பரம்பரை என்கிற படத்தில் நடிப்பார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அது கைகூடாமல் போகவே வேறு ஒரு கதையை மெட்ராஸ் என்கிற பெயரில் கார்த்தியை வைத்து படமாக்கி வெளியிட்டார் பா. ரஞ்சித்.

8 ஆண்டுகளாக சார்பட்டா பரம்பரை டைட்டிலை பத்திரமாக வைத்திருந்து ஆர்யாவுக்கு பயன்படுத்தியிருக்கிறார் பா. ரஞ்சித். கார்த்திக்கு சொன்ன கதையை தான் ஆர்யாவை வைத்து படமாக்குகிறார் ரஞ்சித் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

சார்பட்டா பரம்பரை படம் ஆர்யாவுக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

ஆர்யா தன் கெரியரில் எந்த படத்திற்காகவும் இந்த அளவுக்கு உடல் அளவில் மாறியது இல்லை. இந்நிலையில் அவரை பாக்சராக பார்க்கும் ரசிகர்களுக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. ஆர்யா ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் அவர் ஒரு படத்திற்காக இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருப்பதை பார்த்து ரசிகர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து தன்னை பாராட்டி, வாழ்த்தி ட்வீட் போட்ட பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆர்யா.

வித்தியாசமான படங்களை இயக்குவதற்கு பெயர் போன ரஞ்சித் சார்பட்டாவையும் தன் ஸ்டைலில் தனியாக தெரிய வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்