ஆப்நகரம்

சிம்பு மேட்டர் தெரிஞ்சுமா விஜய் ஒத்துக்கிட்டார்?

தளபதி 65 படத்தின் கதை குறித்து தான் கோடம்பாக்கத்தில் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 16 Dec 2020, 11:26 am
தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா படம் புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 10ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
Samayam Tamil vijay


அனிருத் தான் தன் நண்பரான நெல்சன் திலீப்குமாரை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தாராம். அனிருத் அறிமுகம் செய்து வைத்தபோதிலும் நெல்சன் சொன்ன கதை பிடித்துப் போனதால் தான் அவர் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டாராம்.

இந்நிலையில் வேட்டை மன்னன் கதையில் தான் விஜய் நடிக்கப் போவதாக கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்கிற படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. வேட்டை மன்னன் படம் மூலம் தான் நெல்சன் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகவிருந்தார். ஆனால் முதல் படமே பிரச்சனையாகி டிராப் ஆனது. அதன் பிறகு பல ஆண்டுகளாக பொறுமையாக காத்திருந்த நெல்சனுக்கு நயன்தாரா வாய்ப்பு கொடுத்தார்.

நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தன் திறமையை நிரூபித்தார் நெல்சன் திலீப்குமார். சிம்பு கைவிட்டதால் தான் நெல்சன் திலீப்குமாருக்கு நயன்தாரா கை கொடுத்தார் என்று அப்பொழுது பேசப்பட்டது. எது எப்படியோ கோலமாவு கோகிலா நெல்சன் திலீப்குமாரை அனைவரையும் பார்க்க வைத்தது.

இந்நிலையில் தான் வேட்டை மன்னன் கதையில் விஜய்யை நடிக்க வைக்கிறார் நெல்சன் திலீப்குமார் என்கிறார்கள். டிராப்பான படத்தின் கதை தான் என்றாலும் அதில் விஷயம் இருப்பதாலேயே விஜய் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக தளபதி 65 படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன கதை பிடிக்காமல் அதை திருத்தச் சொல்லியிருக்கிறார் விஜய்.

பொங்கலுக்கு மாஸ்டர், தீபாவளிக்கு தளபதி 65, புத்தாண்டுக்கு சர்பிரைஸ்

தளபதி 65 வேட்டை மன்னன் படத்தின் கதையா என்பதை நெல்சன் திலீப்குமார் தான் உறுதி செய்ய வேண்டும். நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் மார்ச் மாதம் தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கை துவங்குகிறாராம். அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தளபதி 65 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்