ஆப்நகரம்

பாலிவுட் ‘காதல் மன்னன்’ ரன்பீருடன் ஆலியா பட்டுக்கு விரைவில் திருமணம்!

விரைவில் பாலிவுட் ‘காதல் மன்னன்’ ரன்பீருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

Samayam Tamil 13 Jul 2018, 4:28 pm
விரைவில் பாலிவுட் ‘காதல் மன்னன்’ ரன்பீருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
Samayam Tamil aliabhatt


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஆலியா பட். அதேபோல் நடிகர்களில் முன்னணியில் இருந்து வருபவர் ரன்பீர். சமீப காலமாக இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.

தற்போது நடிகை ஆலியா பட்டின் முகத்தில், திருமண களை தாண்டவமாடுகிறது. பாலிவுட் சினிமாவில் இவர்களின் காதல் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதுபற்றி வாய் திறக்க மறுத்து விட்டார் ஆல்யா. ஆனால், ரன்பீர், ‘ஆம்... ஆலியா பட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும்‘ என்றார்.

சமீபத்தில், நடிகர் ரன்பீரின் தாய், தன், 60வது பிறந்த நாளை கொண்டாடினார். நள்ளிரவில் வந்து ரன்பீரின் அம்மாவுக்கு (வருங்கால மாமியார்) வாழ்த்து கூறினார். இதனால், விரைவிலேயே இவர்களது திருமணம் நடக்கும் என்கின்றனர்,

பாலிவுட்டில் ‘ரன்பீர், ஒரு காதல் மன்னன். ஏற்கனவே, கத்ரீனா, தீபிகா போன்ற நடிகையரை காதலித்து, கழற்றி விட்டவர் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்