ஆப்நகரம்

தளபதி 65: விஜய்-முருகதாஸ் கூட்டணி உறுதியா? லேட்டஸ்ட் தகவல்

விஜய் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று தொடர்ந்து செய்தி பரவி கொண்டிருக்கிறது. அது பற்றி கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல்கள் இதோ.

Samayam Tamil 20 Mar 2020, 9:10 am
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.
Samayam Tamil Vijay in Thuppakki


இந்நிலையில் விஜய் அடுத்து எந்த இயக்குனருடன் கூட்டணி சேரப்போகிறார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறது. துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் முருகதாஸுடன் விஜய் கூட்டணி சேர்கிறார் என தகவல் பரவி வருகிறது.

இதுபற்றி விசாரித்ததில் தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது, அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. விஜய்யிடம் முருகதாஸ் மட்டுமின்றி வேறு பல இயக்குனர்களும் கதை சொல்லி இருக்கிறார்கள்.

முருகதாஸ் சமீபத்தில் தான் விஜய்க்கு ஒரு கதையை கூறினாராம். அது பிடித்துவிடவே மீண்டும் இணைந்து பணியாற்ற விஜய் ஆர்வம் காட்டியுள்ளார். ஆரம்பகட்டத்தில் இருப்பதால் மற்ற விஷயங்கள் பற்றி தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது பற்றியும் தற்போது வரை உறுதியான தகவல் இல்லை.

தற்போது மாஸ்டர் படத்தின் மீது தான் ரசிகர்களின் கவனம் இருக்கிறது. அதனால் அந்த படம் திரைக்கு வந்த பிறகு தான் தளபதி 65 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது கொரோனவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத துவக்கத்தில் தளபதி 65 ஷூட்டிங் துவங்க வாய்ப்பிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்