ஆப்நகரம்

ஐஸ்வர்யா அர்ஜூன் நடித்த ‘சொல்லிவிடவா’ தீபாவளிக்கு ரிலீஸ்!

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சொல்லிவிடவா’ வரும் தீபாவளியன்று வெளியாகிறது.

TNN 30 Aug 2017, 4:08 pm
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சொல்லிவிடவா’ வரும் தீபாவளியன்று வெளியாகிறது.
Samayam Tamil ishwarya arjun movie sollividava will release in diwali
ஐஸ்வர்யா அர்ஜூன் நடித்த ‘சொல்லிவிடவா’ தீபாவளிக்கு ரிலீஸ்!


அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தமிழில் “பட்டத்து யானை” படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்தப்படம் ஐஸ்வர்யாவுக்கு சரியான வாய்ப்பை தமிழில் கொடுக்கவில்லை. இதனால் மகள் ஐஸ்வர்யாவுக்காக, அர்ஜுனே ஒரு படத்தை தயாரித்து, இயக்குகிறார். படத்தின் பெயர் ‘சொல்லிவிடவா'. இந்தப் படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் வளர்ந்து வரும் கன்னட நடிகர் சந்தன் குமார் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். மேலும் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபுவின் காமெடி கூட்டணி படத்தை கலகலப்பாக்குகிறது. படத்திற்கு ஜெஸ்சி கிப்ட் இசையமைக்கிறார்.

சென்னை, தர்மஸாலா, ஐதராபாத், கேரளா மற்றும் வட நாடுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது பின்னணி இசைகோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. வருகிற தீபாவளி அன்று படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்