ஆப்நகரம்

அப்பா வயது நடிகருடன் சேர்ந்து ரகசியமாக குழந்தை பெற்றேனா?: இளம் நடிகை விளக்கம்

நடிகர் மனிஷ் ரைசிங்கனுடன் ரகசியமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக வெளியான தகவல் குறித்து நடிகை அவிகா கோர் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார்.

Samayam Tamil 22 Jun 2021, 5:32 pm
மனிஷ் ரைசிங்கனுடன் சேர்ந்து ரகசியமாக குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று நடிகை அவிகா கோர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil it is impossible says avika gor about secret child with manish raisinghan
அப்பா வயது நடிகருடன் சேர்ந்து ரகசியமாக குழந்தை பெற்றேனா?: இளம் நடிகை விளக்கம்



அவிகா கோர்

பாலிகா வது இந்தி தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அவிகா கோர். அந்த தொடர் மூலம் அவர் ஏகத்திற்கும் பிரபலமானார். வளர்ந்த பிறகு தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து படங்களிலும் நடித்து வருகிறார். அவர் கை நிறைய தெலுங்கு படங்கள் வைத்திருக்கிறார். தெலுங்கு தவிர்த்து கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

காதல்

சசுரால் சிமர் கா இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது அவிகா கோருக்கும், மனிஷ் ரைசிங்கனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. மேலும் அவிகாவும், மனிஷும் சேர்ந்து ரகசியமாக குழந்தை பெற்றுக் கொண்டதாகக் கூட பேசப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பேட்டி அளித்த அவிகா குழந்தை விவகாரம் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் அவிகா கூறியதாவது, சான்சே இல்லை. எங்களுக்கு குழந்தை பிறந்து அதை ரகசியமாக வைத்திருக்கிறோம் என்று செய்திகள் வெளியாகின. அதில் உண்மை இல்லை என்றார்.

குழந்தை

நாங்கள் ரொம்ப நெருக்கமாக இருந்தோம், இருக்கிறோம். என் வாழ்வில் மனிஷுக்கு எப்பொழுதுமே முக்கியமான இடம் உண்டு. என் கெரியரில் 13 வயதில் இருந்து இதுவரை அவர் தான் என் நெருங்கிய நண்பர் ஆவார். நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் என்னைவிட 18 வயது பெரியவர். உங்களுக்கு இடையே ஏதாவது நடந்ததா என்று யாராவது தற்போது கேட்டாலும் கூட, அவர் என் அப்பாவை விட ஒரு சில ஆண்டு தான் சின்னவர், ஆனால் கிட்டத்தட்ட என் அப்பா வயதுக்காரர் என்கிறேன் என்றார் அவிகா.

திருமணம்

சங்கீதா சவுகான் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் மனிஷ். அவிகா கோர் பற்றிய வதந்திகள் குறித்து மனிஷ் முன்பு கூறியதாவது, நான் சங்கீதாவை காதலிக்கத் துவங்கியபோது அவரும் கூட நானும், அவிகாவும் காதலர்கள் என்று தவறாக நினைத்துவிட்டார். எனக்கும், அவிகாவுக்கும் இடையே நட்பை தவிர வேறு எதுவும் இல்லை என்று சங்கீதாவிடம் கூறினேன் என்றார். சசுரால் சிமர் கா தொடரில் மனிஷும், அவிகாவும் கணவன், மனைவியாக நடித்தார்கள். டிவியில் அவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது. இதையடுத்து அவர்கள் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்