ஆப்நகரம்

துப்பாக்கி 2 உருவாகிறதா? சந்தோஷ் சிவன் முதல்முறையாக விளக்கம்

இன்ஸ்டாகிராமில் சந்தோஷ் சிவன் பதிவிட்ட புகைப்படங்கள் துப்பாக்கி 2 பற்றிய ஹிண்ட் என பரவிய செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2020, 1:05 pm
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதில் விஜய் மீண்டும் முருகதாஸ் உடன் கூட்டணி சேர்கிறார் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil Vijay in Thuppakki


மேலும் சமீபத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தில் சில ஸ்டில்களை பதிவிட்டிருந்தார். அவர் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஹிண்ட் கொடுக்கவே புகைப்படங்களை பதிவிட்டார் என செய்திகள் பரவியது.

அதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அதிக அளவில் இதை கொண்டாட ஆரம்பித்தனர். ஏற்கனவே மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாததால் வருத்தத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் தளபதி 65 துப்பாக்கி 2 என குஷி ஆகினர். சமூக வலைத்தளங்களில் இது வைரலானது.

இந்நிலையில் இது பற்றி சந்தோஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். தான் ஹிண்ட் எதுவும் கொடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

"நான் இன்ஸ்டாவில் மற்ற படங்களில் ஸ்டில்களையும் தான் பதிவிட்டுள்ளேன். அது ஹிண்ட் இல்லை" என அவர் ட்விட் செய்துள்ளார். இதன் மூலமாக துப்பாக்கி 2 பற்றிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


மேலும் தளபதி 65 படம் ஒரு ஸ்க்ரிப்ட்டாகத் தான் இருக்கும் என்பதும் உறுதி ஆகியுள்ளது. தற்போது சினிமா துறை முற்றிலும் கொரொனா முழு அடைப்பால் முடங்கி உள்ளது. லாக் டவுன் முடிந்து ஷூட்டிங் பணிகள் மீண்டும் துவங்கிய பிறகு தான் தளபதி 65 பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்