ஆப்நகரம்

சிவகார்த்திகேயனை நான் இயக்கவில்லை, ஆனால்...: கே. வி. ஆனந்த்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதை கே.வி. ஆனந்தே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Mar 2021, 8:36 am
என் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil it is not true about sivakarthikeyan kv anand
சிவகார்த்திகேயனை நான் இயக்கவில்லை, ஆனால்...: கே. வி. ஆனந்த்


சிவகார்த்திகேயன்

வித்தியாசமான படங்களை எடுப்பதற்கு பெயர் போனவர் கே.வி. ஆனந்த். அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் இது குறித்து கே.வி. ஆனந்த் கூறியிருப்பதாவது, நான் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் நான் அவரை வைத்து படம் பண்ணுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து வேலை செய்ய அவருக்கு ஏற்றது போன்ற ஸ்க்ரிப்ட் வேண்டும். அது நடந்தால் அவருடன் படம் பண்ணலாம் என்றார்.

மாஃபியா

நான் தற்போது தமிழகத்தில் இருக்கும் மாஃபியா தொடர்பான ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். அரசியல், சட்டம் என்று பல்வேறு துறைகளில் மாஃபியா இருக்கிறது. மும்பையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நாயகன் படத்தை பார்த்திருக்கிறோம். நான் நம் மாநிலத்தில் இருக்கும் மாஃபியா பற்றி படம் எடுக்க விரும்புகிறேன். தினமும் நடக்கும் விஷயம் ஆனால் மக்களுக்கு தெரியாதது. மாஃபியாவுக்கும், ரவுடியிசத்திற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. என் படத்தில் அரசியல்வாதிகள் பற்றி காட்டுவேன். ஆனால் இது அரசியல் படம் அல்ல. இது ஒரு கமர்ஷியல் படம். அதில் காதல் டிராக் கூட உண்டு என்கிறார் கே.வி. ஆனந்த்.

டான்

சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். டான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்தது. இதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. மீண்டும் கோவையில் தான் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்கு சிவகார்த்திகேயன் சென்னையில் தான் இருப்பாராம்.

எடை குறைப்பு

டான் படத்திற்காக சிவகார்த்திகேயன் தன் உடல் எடையை குறைத்து ஒல்லியாகிவிட்டார். அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டான் படம் கல்லூரி பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை லைகா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் கல்லூரி மாணவராக நடிக்கும் டான் படத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் இப்படி எலும்பும், தோலுமா ஆகிட்டாரே!


அடுத்த செய்தி

டிரெண்டிங்